மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரின் உடல் உறுப்புகள் தானம் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 7 December 2015

மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரின் உடல் உறுப்புகள் தானம்


 

சென்னை,

மூளைச்சாவு அடைந்த என்ஜினீயர் உடல் உறுப்புகள் தானம் மூலம் பெண் உள்பட 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

என்ஜினீயர்

பெரம்பலூரை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் சரவணன் (வயது 23). என்ஜினீயரான இவர் கடந்த மாதம் 18-ந் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயத்துடன் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் 24-ந் தேதி சரவணன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். இதையடுத்து மூளைச்சாவு அடைந்த சரவணனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மாணிக்கம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில் சரவணனின் உடல் உறுப்புகள் பிரித்து எடுக்கப்பட்டு தானமாக வழங்கப்பட்டன.

3 பேருக்கு மறுவாழ்வு

கல்லீரல் ஆவடியை சேர்ந்த 45 வயதான வியாபாரி ஒருவருக்கு டாக்டர் முகமது ரெய்லா குழுவினர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர். இதேபோன்று ஒரு சிறுநீரகத்தை மேடவாக்கத்தை சேர்ந்த 41 வயதான பெண்ணுக்கு டாக்டர் கே.நடராஜன் குழுவினர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 நோயாளிகளும் நலமாக உள்ளனர். மேலும் 2 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். சரவணனின் மற்றொரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு நோயாளி ஒருவருக்கு பொருத்த வழங்கப்பட்டது. சரவணன் உடல் உறுப்புகள் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages