பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடிக்காத விஜய், அஜீத் - ரஜினி கமலை முந்திய தனுஷ்
அமெரிக்காவிலிருந்து வரும் பத்திரிகை போர்ப்ஸ். இதன் இந்திய பிரிவான போர்ப்ஸ் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் வருமானம் மற்றும் பிரபலமான ஸ்தானத்தின் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு இடம்பெற்ற விஜய், அஜீத் பெயர்கள் இந்த ஆண்டு இடம்பெறவில்லை. இந்திய அளவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். தமிழ் பிரபலங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் 14வது இடம், கிரிக்கெட் வீரர் அஸ்வின் 31 இடம் பிடித்திருக்கின்றனர். தமிழ் நடிகர்களில் 37வது இடம் பிடித்து தனுஷ் முன்னணியில் இருக்கிறார். கமல், ரஜினி முறையே 46 மற்றும் 69வது இடம் பிடித்திருக்கின்றனர். காஜல் அகர்வால் 58, ஸ்ருதி ஹாசன் 61, சூர்யா 71, இயக்குனர் ராஜமவுலி 72 பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் முதன்முறையாக சந்தானம் 52, ஆர்யா 80 இடத்தை கைப்பற்றியுள்ளனர். கடந்த ஆண்டு பட்டியலில் இடம்பிடித்த விஜய், அஜீத் பெயர்கள் பட்டியலில் இல்லை.
No comments:
Post a Comment