சென்னை அருகே தீம் பார்க்கில் - எந்திரன் 2 ஷூட்டிங் தொடங்கியது
ரஜினி நடிக்கும் 'எந்திரன் 2'ம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள ஒரு தீம் பார்க்கில் தொடங்கியது. இதில் ரஜினி, எமிஜாக்சன் பங்கேற்று நடித்தனர். இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்க பேச்சு நடைபெற்றது. அவரை ஷங்கர், ரஜினி நேரில் சென்று சந்தித்து பேசினர். கடைசி நேரத்தில் சில கண்டிஷன்களும் ஏற்க முடியாதளவுக்கு இருந்ததாலும், கேட்டளவுக்கு கால்ஷீட் தேதி ஒதுக்காததாலும் அவர் இப்படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இது எந்திரன் பட குழுவினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் ஷாக் ஆக அமைந்திருக்கிறது. தற்போது அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் அல்லது கத்தி படத்தில் நடித்த நீல் நிதின் முகேஷ் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. ஹிருத்திக் ரோஷன் நடிப்பதையே ஷங்கர் அதிகம் விரும்புகிறார். அவர் கேட்கும் சம்பளம் கொடுத்து நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே எமி ஜாக்ஸன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தவிர மேலும் 2 முன்னணி நடிகைகள் நடிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment