ஜல்லிக்கட்டு பற்றி இன்று அறிவிப்பு வெளியாகுமா? - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 29 December 2015

ஜல்லிக்கட்டு பற்றி இன்று அறிவிப்பு வெளியாகுமா?
























புதுடில்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாகவும், அதில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனையடுத்து வரும் 2016ல் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுத, அதே கோரிக்கைக்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
இதனையடுத்து, வரும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதே கருத்தை பலமுறை கூறியுள்ள அவர், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். இதே கருத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கரும் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து நல்ல செய்தி ஒரிரு நாளில் வெளிவரும் என கூறினார்.
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை நடத்துவதற்காக அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசியல் கட்சிகளின் வாயை அடைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இன்னும் சில மாதங்களில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழக இளைஞர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் தமிழக இளைஞர்களின் மனதை கவர முடியும்; தேர்தல் நேரத்தில், இதை பிரசாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசும், பா.ஜ., வட்டாரங்களும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து முடிவு எடுக்கப்பட்டால், அது குறித்த அறிவிப்பு நாளையே வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ள
ன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages