60 ஆண்டுகளாக இயக்கப்படாத வங்கி கணக்குகளை வெளியிட்டது சுவிஸ்
ஜெனீவா: சுவிட்சர்லாந்து வங்கிகளில்தான் உலகம் முழுவதும் இருந்து கருப்பு பண முதலைகள் தங்கள் பணத்தை பதுக்கி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, சில விவரங்களை அந்நாட்டு அரசு அளிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு வங்கிகளில் 60 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருக்கும் 2,600 கணக்குகள் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து அரசு முதல் முறையாக வெளியிட்டுள்ளது. வாரிசுதாரர்கள் பணத்தை எடுத்து கொள்ள இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இந்த கணக்குகளில் சுமார் ₹297 கோடி உள்ளது. ஓராண்டு காலத்துக்குள், சம்பந்தப்பட்ட கணக்குதாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள் வங்கி நிர்வாகத்தை அணுக வேண்டும்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம், 6 இந்தியர்களின் கணக்குகளும் இதில் உள்ளன.
No comments:
Post a Comment