கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,)
தேர்வு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்துக்கு
விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
அறிவித்தது. அதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக கடைசி தேதி
வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுவதாக
இருந்த எழுத்துத் தேர்வு தேதி பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment