எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் செயல்பாடு படுமோசம்- வெறும் 10%தான் ஆதரவு.... ஜூ.வி. சர்வே - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 24 November 2015

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் செயல்பாடு படுமோசம்- வெறும் 10%தான் ஆதரவு.... ஜூ.வி. சர்வே

சென்னை: தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் செயல்படு படுமோசமானது என்று ஜூனியர் விகடன் நடத்திய கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். வெறும் 10% பேர் மட்டும்தான் சூப்பர் என பாராட்டு தெரிவித்துள்ளனர். ஜூனியர் விகடன் வாரம் இரு முறை ஏடு சட்டசபை தேர்தலை முன்வைத்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த இதழில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து கணிப்பு வெளியிட்டிருந்தது. அதில் பெரும்பாலானோர் ஜெயலலிதா அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்த வாரம் தே.மு.தி.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் செயல்பாடு குறித்து சர்வே நடத்தி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16,846 பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. விஜயகாந்த் படுமோசம் 1/5 விஜயகாந்த் படுமோசம் இதில் விஜயகாந்தின் செயல்பாடு படுமோசம் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சுமார் என 28.37%; மோசம் என 30.41%; மிக மோசம் என 30.49% என சுமார் 90% பேர் விஜயகாந்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages