உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதிப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயஙகரவாதிகளுக்கு சம்பளம் வெகுவாக
குறைக்கப்பட்டுள்ளது. சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதால் பல பயங்கரவாதிகள் அந்த
அமைப்பில் இருந்து விலகி வேறு அமைப்புகளில் சேர்ந்து வருகிறார்கள்.
பயங்கரவாதிகள் தங்களுக்கு தெரிந்தவர்களை ஐஎஸ்ஐஎஸ்
அமைப்பில் சேர்த்துவிட்டால் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம்
வரை பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைப்பில்
சேர்பவர்களில் கம்ப்யூட்டர் நிபுணர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட நன்கு
படித்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தற்போது சுமார் 2 லட்சம்
பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஷ்யா
மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தி வரும் தொடர்
தாக்குதல்களால் ஐஎஸ்.ஐஎஸ் அமைப்பின் ஒரு பகுதி அழிந்துவிட்டது என்றும்
இதனால் சிரியாவில் உள்ள பயங்கரவாதிகள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள்
மூலம் பலரை அமைப்பில் சேர்த்து வருகிறது ஐஎஸ்ஐஎஸ் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment