புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மீன் மற்றும் இறைச்சி விற்பனை நேற்று அதிகளவில் காணப்பட்டது. புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் நேற்று தொடங்கியது. அதிலும் மாதத்தின் முதல் நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மற்றும் இறைச்சி பிரியர்கள் அதிகளவில் மார்க்கெட் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்தனர். இதேபோல் அரியாங்குப்பம் மீன் அங்காடி மற்றும் இறைச்சி அங்காடிகளில் ஏராளமானவர்கள் வந்து மீன் வாங்கிச் சென்றனர். மேலும் அரியாங்குப்பம் அடுத்த மணவெளி மாரியம்மன் கோவில் பின்புறத்தில் உள்ள கன்னியாங்குளத்தில், வலை விரித்தும் மீன் பிடித்து விற்பனை செய்தனர்.

No comments:
Post a Comment