அ.தி.மு.க 44–வது ஆண்டு தொடக்க விழா மும்பையில் நடந்தது - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 19 October 2015

அ.தி.மு.க 44–வது ஆண்டு தொடக்க விழா மும்பையில் நடந்தது


மும்பை,
அ.தி.மு.க 44–வது ஆண்டு தொடக்க விழா மும்பையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
பொதுக்கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 44–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மராட்டிய மாநில அ.தி.மு.க கழகத்தின் சார்பில் நேற்று தாராவி 90 அடி சாலையில் நடந்தது. இதில் மாநில கழக அவைத்தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில கழக செயலாளர் கே.எஸ் சோமசுந்தரம், இணைச்செயலாளர் லட்சுமி ரத்தன், துணைச்செயலாளர் ராணி செல்வராஜ், மாநில கழக பொருளாளர் ஆர்.கணேசன், மாநில அம்மா பேரவை செயலாளர் ராஜேந்திரா எம்.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.
புதிய நிர்வாகிகள் முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை மாநில கழக துணைச்செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இதனை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களான சந்திரன், ஜான் செல்லத்தம்பி, ராமசீதாபதி, மும்பை மாநகர செயலாளர் சுந்தரராஜ், தானே மாவட்ட செயலாளர் உதயசெல்வம், மும்பை மாநகர அவைத்தலைவர் சிவன் பாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மேலும் பொதுக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், தாராவி பகுதி செயலாளர் செல்வம், கோலிவாடா பகுதி செயலாளர் முருகேஷ், மும்பை மாநகர் மாவட்ட கழகம், தானே, பால்கர், அவுரங்காபாத், ராய்காட், ஆகிய மாவட்டங்கள் மற்றும் குர்லா, கோரேகாவ், மலாடு, சாந்தாகுரூஸ், போரிவிலி, அந்தேரி உள்பட பல தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
பூரண மதுவிலக்கு இதனை தொடர்ந்து தமிழக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:–
மக்கள் நல்வாழ்விற்கான தொடங்கப்பட்ட கட்சி அ.தி.மு.க கட்சி தான். முதலில் 1972–ம் ஆண்டில் தொடங்கி தற்போது 44–ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. நமது கட்சியில் அடிமட்ட தொண்டர்கள் கூட எம்.எல்.ஏ. அல்லது அமைச்சர் ஆக முடியும். ஆனால் மற்ற கட்சிகளில் முடியாது. தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் பிரச்சனை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டாஸ்மாக் விற்பனையை நிறுத்த கோரி பல போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் மற்ற மாநிலங்கள் மதுவிலக்கு கொண்டு வர வில்லை. நாங்களும் பூரண மதுவிலக்கு கொண்டு வர படிப்படியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
மணி மண்டபம் கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாடு வீழ்ச்சி அடைந்து கிடந்தது. தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் நல்ல முன்னேற்றம் கண்டு உள்ளது. தொழில் நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளது. சிவாஜி சிலை நடுரோட்டில் இருந்ததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. அதனை அகற்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட அம்மா ஒப்புதல் வழங்கி உள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடத்தி வந்த கட்சியை அவரது காலத்திற்கு பிறகு தற்போது அம்மாவின் முயற்சியால் நாட்டில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages