டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு ஓ.என்.ஜி.சி. துணை நிறுவனத்தில் 331 அதிகாரி வேலை - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 19 October 2015

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு ஓ.என்.ஜி.சி. துணை நிறுவனத்தில் 331 அதிகாரி வேலை


ஓ.என்.ஜி.சி. துணை நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 331 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 

இது பற்றிய விவரம் வருமாறு:-

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. என்று அழைக்கப்படுகிறது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இதன் துணை நிறுவனங்களில் ஒன்று 'பெட்ரோ அடிசன்ஸ் லிமிடெட்'. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் மற்றும் நான்-எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆபரேஷன்ஸ், மெயின்டனன்ஸ், குவாலிட்டி லேப்ஸ், மார்க்கெட்டிங், நிதி, எச்.ஆர். உள்ளிட்ட பிரிவுகளில் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு 254 பேரும், ஆபரேசன், செக்யூரிட்டி, மெட்டீரியல் மேனேஜ்மென்ட், கம்பெனி செகரட்டரி போன்ற நான் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு 77 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 331 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

வயது வரம்பு :
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வித்தியாசப்படுகிறது. அதிகபட்சம் 40 வயதுடையவர்களுக்கும் பணி உள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு, விதிவிலக்கு போன்ற விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

கல்வித் தகுதி:

கெமிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், மெக்கானிக்கல், பிட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணி உள்ளது. பயர்சேப்டி 6 மாத பயிற்சியுடன் பெட்ரோகெமிக்கல், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ரசாயன, உர நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றவர்களுக்கும் பணி உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கான முழுமையான கல்வித்தகுதி, வயது வரம்பு, அனுபவ விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும். 25-10-15-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இதுபற்றிய விரிவான விவரங்களை www.opalindia.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages