மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 263 பணியிடங்கள் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 19 October 2015

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 263 பணியிடங்கள்


என்.பி.சி. எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் முதுகலை பட்டதாரிகளுக்கு அதிகாரி பணி அறிவிக்கப்பட்டு உள்ளது. 263 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய தொழில்துறையின் கீழ் 'நேஷனல் புரொடக்டிவிட்டி கவுன்சில்' எனப்படும். 'தேசிய உற்பத்தி திறன் பேரவை' செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில் ‘எக்சாமினர்’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 263 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 101 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் 54 பணியிடங்களும், கெமிஸ்ட்ரி பிரிவில் 44 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்பர்மேசன் டெக்னாலஜி பணிக்கு 26 இடங்களும், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 34 பணியிடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் கீழே தரப்படுகிறது...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 1-8-15-ந் தேதி 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-8-1980 மற்றும் 1-8-1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

வேதியியல் முதுநிலை படிப்பு படித்தவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், சிவில், மெக்கானிக்கல், டெக்னாலஜி ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்தவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு பணி உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையத்தில் பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 31-10-15-ந் தேதி வரை இணைய விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.

இது பற்றிய விரிவான விவரங்களை     www.recruitmentnpc.in, www.ipindia.nic.in, www.dipp.nic.in   ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages