5 ஒரு நாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி, குறுகிய கால சுற்றுப் பயணமாக வரும் ஜனவரி 6-ஆம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்கிறது.
ஜனவரி 12 முதல் 31-ஆம் தேதி வரை 3 வார காலம் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இத்தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு, தில்லியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மெல்போர்ன், சிட்னி, பெர்த், பிரிஸ்பேன் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஒரு நாள் தொடர்
தேதி மைதானம் இடம்
ஜன.12 டபிள்யூ.ஏ.சி.ஏ. பெர்த்
ஜன.15 காபா பிரிஸ்பேன்
ஜன.17 எம்.சி.ஜி. மெல்போர்ன்
ஜன.20 ஓவல் கான்பெர்ரா
ஜன.23 எஸ்.சி.ஜி. சிட்னி
டி-20 தொடர்
தேதி மைதானம் இடம்
ஜன.26 ஓவல் அடிலெய்டு
ஜன.29 எம்.சி.ஜி. மெல்போர்ன்
ஜன.31 எஸ்.சி.ஜி. சிட்னி
No comments:
Post a Comment