முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மீண்டும் கேரளாவுக்கு உபரி நீர் திறக்க வாய்ப்பு - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மீண்டும் கேரளாவுக்கு உபரி நீர் திறக்க வாய்ப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மீண்டும் கேரளாவுக்கு உபரி நீர் திறக்க வாய்ப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மீண்டும் கேரளாவுக்குள் உபரி நீர் திறக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கேரளாவுக்குள் உபரிநீர் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.



அணையிலிருந்து தமிழகத்துக்குத் தொடர்ந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுப்பட்டு வந்தது. இருந்தாலும் மூன்று நாட்களுக்கு முன், நீர்வரத்து அதிகரித்ததால், கேரளாவுக்குள் உபரி நீர் திறக்கப்பட்டது. பின் நீர்வரத்து குறைந்தது.



தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குமுளி, தேக்கடி பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால், நீர்வரத்து விநாடிக்கு 2,468 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டமும் 141.70 அடியை நெருங்க உள்ளது.



அணையின் நீர்மட்டத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக , கேரளாவுக்குள் மீண்டும் உபரி நீர் திறக்க வாய்ப்பிருப்பதாகத் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இடுக்கி மாவாட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages