இதில் தொழில் துவங்குவதற்கு சிறந்த நாடாக முதலிடத்தில் டென்மார்க் இடம்பெற்றுள்ளது. 2வது இடத்தை நியூசிலாந்தும், 3வது இடத்தை நார்வேயும் பிடித்துள்ளன. சிங்கப்பூர் 8வது இடத்திலும், லண்டன் 10வது இடத்திலும் உள்ளன. ஆனால், மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா 22வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு வரை 2வது இடத்தில் இருந்த இந்த நாடு, தரவரிசையில் படிப்படியாக சரிவடைந்துள்ளது. இலங்கை 91வது இடத்திலும், சீனா 94வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 103வது இடத்தில் உள்ளது. வெளிநாட்டு முதலீடு, மேக்இ–்ன் இந்தியா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், இந்தியா 97வது இடத்தையே பிடித்துள்ளது.
இதுகுறித்து போர்ப்ஸ் வெளியிட்ட தகவலில், ‘‘ஏழ்மை, ஊழல், வன்முறை, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு, போதுமான மின்சார வசதி மற்றும் பகிர்மான வசதியின்மை, அறிவுசார் சொத்துரிமை விதிகளை போதுமான அளவு நடைமுறைப்படுத்தாதது, போதுமான ேபாக்குவரத்து வசதி, விவசாய உட்கட்டமைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் இந்தியா பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் முதலீட்டாளர் பாதுகாப்பை பொறுத்தவரை 8வது இடத்திலும் உள்ளது. தனிநபர் சுதந்திரத்தில் 57வது இடத்திலும், சொத்துரிமையில் 61வது இடத்திலும் இருக்கிறது. ஆனால், வர்த்தக சுதந்திரத்தில் 125வது இடத்திலும், தொழில்நுட்ப சுதந்திரத்தில் 120வது இடத்திலும், ஊழலில் 77வது இடத்திலும் இருப்பதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment