மதுரை - தே.மு.தி.க தலைவரும் முன்னாள் நடிகருமான விஜய் காந்தின் நடவடிக் கைகளை பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அரசியல் நோக்கர்களும் மற்றும் பொது மக்களும் கடுமையாக கண்டித்துள்ளனர். வெறும் 5சதவீத ஓட்டு வங்கியை வைத்துக் கொண்டு, இவ்வளவு ஆணவத்துடனும் ஆர்ப்பாட்டத்துடனும் நடந்து கொள்வதா என்று பல தரப்பினரும் விஜய காந்தை கண்டித்துள்ளனர். தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த்தின் நடவடிக் கைகள் எல்லாம் விசித்திரமாகவே உள்ளன. பொது இடங்களிலும் ,பிரச்சார கூட்டங்களிலும் மற்றும் சட்டமன்றத்திலும் அவர் இதுவரை நடந்து கொண்டவிதம், கேலிக் குரியதாகவே அமைந்துள்ளன. குறிப்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதும், விஜய் காந்த் நடந்து கொள்ளும் விதம் பொதுமக்கள் மத்தியிலும் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தபோது ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் பேட்டியின் இடையிலேயே விறுவிறுவென்று எழுந்து நடந்து சென்றார் விஜய காந்த் அவரை பிடித்து இழுத்து உட்கார வைப்பதற்குள் கூட்டணி தலைவர்களுக்கே போதும், போதும் என்றாகிவிட்டது. அதன் பிறகு சென்னை பத்திரிகையாளர் சந்திப்பிலும் பத்திரிகையாளர்களை மிரட்டும்தொனியில் நடந்து கொண்டார் விஜய் காந்த். நேற்று முன் தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் , நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் தூ என்று காறி துப்பி அநாகரிமாக நடந்து கொண்டார் விஜய காந்த். இது அநாகரித்தின் உச்ச கட்டம் என்று பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஜனநாயகத்தின் 4வது தூணாக விளங்குவது பத்திரிகை. அந்த பத்திரிகையாளர்களையே விஜய் காந்த்துக்கு மதிக்க தெரியவில்லை . இதற்கெல்லாம் என்ன காரணம்? என்றால் அவருக்கு இருக்கும் தலைக்கனம்தான் .வெறும் 5சதசவீத ஓட்டு வங்கியே விஜய் காந்த்துக்கு இருப்பதாக இதற்கு முன்பு பல்வேறு கணிப்புகள் தெரிவித்துள்ளன. அப்படி இருந்தும் தமிழக எதிர் கட்சி தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு விஜய் காந்த்தை கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள். 4 கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் நல கூட்டணியை உருவாக்கிய வைகோதான் முதன் முதலில் விஜய் காந்த்துக்கு அழைப்பு விடுத்தார். தனது கூட்டணியில் 4கட்சிகள் இருந்தும் இவர் ஏன் விஜய் காந்த்துக்கு அழைப்பு விடுத்தார் என்பதுதான் விசித்திரத்திலும் விசித்திரம் ஆகும். வைகோ அழைப்பு விடுத்த மறுநாள் தி.மு.க தலைவர் கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு விஜய் காந்த்துக்கு அழைப்பு விடுத்தார். பாராளுமன்ற தேர்தல் நடந்த போதும் விஜய் காந்த்துக்கு கருணாநிதி அழைப்பு விடுத்து பார்த்தார்.
ஆனால் விஜய்காந்த் அதனை பொருட்படுத்தவும் வில்லை . கருணாநிதியை மதிக்கவும் இல்லை. உடனே ஆத்திரப்பட்ட கருணாநிதி விஜய்காந்த் ஒரு ஸ்டண்ட் நடிகர் அவர் அப்படிதான் இருப்பார் என்று கிண்டலடித்தார். அதையெல்லாம் மறந்து விட்டு இப்போது மீண்டும் விஜய் காந்த்தை கூட்டணிக்கு அழைக்கிறார் கருணாநிதி. இன்னொரு பக்கம் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் தே.மு.தி.க எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறது என்று திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். இது பற்றி விஜய் காந்த்திடம் கேட்டபோதுசொல்பவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும். பிறகு பார்க்கலாம் என்று கிண்டலடிக்கிறார்.ஆனாலும் தமிழக எதிர் கட்சித்தலைவர்கள் ரோஷம் கெட்டு போய் திரும்ப,திரும்ப விஜய் காந்த்தை அழைக்கிறார்கள். வெறும் 5சதவீத ஓட்டு வங்கியை வைத்திருக்கும் விஜய் காந்த்திற்கு இத்தனை மதிப்பு கொடுப்பதால்தான் அவருக்கு தலைக்கனம் ஏறி விட்டது என்று அரசியல் நோக்கர்களும் பொது மக்களும் கூறுகிறார்கள். நேற்று கூட தஞ்சையில் முதல்வரின் படத்தை அகற்ற சொல்லி இருக்கிறார் விஜய் காந்த். ஒரு எதிர் கட்சித்தலைவருக்கு உரிய நடத்தை அவரிடம் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் ஒரு அரசியல் வாதிக்கு உரிய தகுதி கூட அவரிடம் இல்லை. சட்டமன்றத்திலேயே நாக் கை துருத்தக்கூடியவர் விஜய் காந்த். பொதுஇடங்களில் கண்ட படி பேசுவது தனது கட்சி எம்.எல்.ஏக்களையே நைய புடைப்பது பத்திரிகையாளர்களை அவமதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் விஜய் காந்த் ஒரு மன நோயாளியோ? என்று அரசியல் நோக்கர்களும் பொது மக்களும் சந்தேகிக்கிறார்கள். அவர் தன்னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் விருப்பப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment