முன்பதிவு செய்பவர்களுக்கு இனிமேல் அரை டிக்கெட் கிடையாது 5 முதல் 12 வயது உள்ளவர்களுக்கு முழு டிக்கெட் ஏப்ரல் மாதம் முதல் அமல் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 4 December 2015

முன்பதிவு செய்பவர்களுக்கு இனிமேல் அரை டிக்கெட் கிடையாது 5 முதல் 12 வயது உள்ளவர்களுக்கு முழு டிக்கெட் ஏப்ரல் மாதம் முதல் அமல்


 

புதுடெல்லி,

ரெயில்வே துறையில் முன்பதிவு செய்து பயணிப்போருக்கு அரை டிக்கெட் முறை ஒழிக்கப்படுகிறது. 5 முதல் 12 வயதுக்கு இடைபட்ட சிறுவர்களுக்கு, வருகிற ஏப்ரல் மாதம் முதல் முழு டிக்கெட் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
மாறுதல் ரெயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு டிக்கெட் கிடையாது. 5 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் (பாதி கட்டணத்தில்) வழங்கப்படுகிறது. இந்த முறையை ரெயில்வே நிர்வாகம் மாற்றியமைத்து உள்ளது.
அதன்படி படுக்கை வசதி அல்லது இருக்கை வசதிக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அதில் இடம்பெறும் 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான அரை டிக்கெட் முறை ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் அவர்களுக்கு முழு டிக்கெட் வழங்கப்படும். முன்பதிவுக்கான விண்ணப்ப படிவத்தில் இதற்கான திருத்தம் செய்யப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. அவர்கள் தொடர்ந்து இலவசமாகவே பயணம் செய்யலாம்.
மாற்றம் இல்லை அதேசமயம் முன்பதிவில்லாத (அன்ரிசர்வ்டு) பெட்டியில் பயணிப்போர், தங்களது 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் பெறலாம். அதில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் (2016) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்திய ரெயில்வே துறை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages