வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், பிரபு, சிவ.கார்த்திகேயன் ஆகியோர் நிதியளித்துள்ளனர்.
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல்வரின் நிவாரண நிதிக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர்கள் சத்யராஜ்-சிபிராஜ் ஆகியோர் இணைந்து ரூ.2.25 லட்சத்தையும், பிரபு ரூ.5 லட்சத்தையும், சிவ.கார்த்திகேயன் ரூ.5 லட்சத்தையும் சங்கத் தலைவர் நாசரிடம் திங்கள்கிழமை வழங்கினர்.
இந்த நிதிக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தின் சார்பில் (சூர்யா, கார்த்தி) ரூ. 25 லட்சமும், விஷால் சார்பில் ரூ. 10 லட்சமும், தனுஷ் சார்பில் ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் ரூ.52.25 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் நிதி முதல்வர் நிவாரண நிதிக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment