தாய்லாந்து மன்னரின் நாயை விமர்சித்தவருக்கு 37 ஆண்டு சிறை தண்டனை
பாங்காங் : தாய்லாந்தில் மன்னராக தற்போது பூமிபால் அதுல்யாதெச் என்பவர் இருந்து வருகிறார். அங்கு மன்னரை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் உள்ளது. இந்நிலையில் மன்னரின் நாயை கிண்டல் செய்ததற்காக ஒருவருக்கு தாய்லாந்து அரசு சிறை தண்டனை அளித்துள்ளது. தானாகொர்ன் சிரிபைபூன் என்ற அந்த தொழிலாளி இணையத்தில் மன்னரின் நாய் குறித்து கிண்டலாக பதிவு செய்திருந்தார். அதற்காக தொழிலாளி சிரிபைபூன் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் மன்னரை அவமதித்த குற்றச்சாட்டு என்று இரண்டு பிரிவுகளில் ராணுவ நீதிமதின்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவருடையை இந்த இணைய தள பதிவிற்காக 37 வருட சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னருடைய நாய் பற்றி என்ன விமர்சித்தார் என்பது குறித்து ராணுவம் தெரிவிக்கவில்லை என்று தொழிலாளியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment