கலாம் வாழ்ந்த வீட்டில் பொருட்கள் அகற்றம் - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 19 October 2015

கலாம் வாழ்ந்த வீட்டில் பொருட்கள் அகற்றம்

புதுடில்லி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள், டில்லி ராஜாஜி மார்க் இல்லத்திலிருந்து, அகற்றப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை சேர்ந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், டில்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வந்தார். ஜூலை 27ல், மேகாலயா மாநிலத்தில், ஷில்லாங் நகர கல்லுாரியில் உரையாற்றியபோது, அப்துல் கலாம், மாரடைப்பால் காலமானார்.

அப்துல் கலாம் வசித்து வந்த இல்லத்தை, 31க்குள் காலி செய்து தருமாறு, அவரது தனி ஊழியர்களுக்கு, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இரு மாதங்களுக்கு முன், 'நோட்டீஸ்' அனுப்பி இருந்தது. இதை ஏற்று, கலாம் இல்லத்தில் இருந்த, அவரது புத்தகங்கள், அவர் பயன்படுத்தி வந்த பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.இவை அனைத்தும், கலாமின் சொந்த ஊரான, ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிகிறது. கலாமின் உறவினர்கள், ராஜாஜி மார்க் இல்லத்தில், கலாமுக்கு நினைவகம் கட்ட வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages