தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
மிகுந்த பரபரப்போடு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிந்து விட்டது.
இனி வெற்றி பெற்றவர் களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையோடு இருந்து நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்று விரும்பு கிறேன்.
அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. அவற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆந்திரா சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளது காலம் கடந்த நடவடிக்கை. மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் பயணம் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment