லண்டன்
- சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இதுவரை இங்கிலாந்து வீரர்கள்
சென்றிராத நிலையில் முதல் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த டிம் பீக் என்ற
விண்வெளி வீரர் புறப்பட்டு சென்றுள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான்
உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன.
பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6
லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம்
அமைக்கப்பட்டு, அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
அதில்
பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து அந்த பணிகளை
செய்து வருகின்றனர். விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு
ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர். அந்த குழுவில் இதுவரை
இங்கிலாந்து விண்வெளி வீரர்கள் இடம் பெற்றதில்லை. இந்நிலையில் தற்போது
முதன் முறையாக இங்கிலாந்து வீரர் ஒருவர் இடம் பெற்று அங்கு புறப்பட்டு
சென்றுள்ளார்.
அவரது பெயர் டிம் பீக்.
43 வயதான இவருக்கு ரெபேகா என்ற மனைவியும், தாமஸ், ஆலிவர் என்ற 2 மகன்களும்
உள்ளனர். இதற்காக இவர் மேற்கு சூசெஸ்சில் உள்ள சிசெஸ்டர் நகரில் 18
மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார். தற்போது இவருடன் ரஷ்ய வீரர் ஒருவரும்,
அமெரிக்க வீரர் ஒருவரும் விண்வெளி ஆய்வகம் சென்றுள்ளனர். இவர்கள் 3 பேரும்
நேற்றுமுன்தினம் கஜகஸ்தானில் இருந்து சோயுஷ் ராக்கெட் மூலம் புறப்பட்டு
சென்றனர்.
No comments:
Post a Comment