வங்கி கணக்குகள் ஆரம்பிக்க பான் எண் கட்டாயமாகிறது - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

வங்கி கணக்குகள் ஆரம்பிக்க பான் எண் கட்டாயமாகிறது

வங்கி கணக்குகள் ஆரம்பிக்க பான் எண் கட்டாயமாகிறது
  அனைத்து வகை வங்கி கணக்குகள் தொடங்குவதற்கு பான் எண் விரைவில் கட்டாயம் ஆகிறது.

பாராளுமன்றத்தில் இன்று துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பதிலளித்தார். அவர் பேசுகையில், “ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட எந்தப் பொருளையும் வாங்கினாலும், விற்றாலும் பான் (PAN) எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்படும். இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும். உள்நாட்டில் கருப்பு பணம் புழங்குவதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

அருண் ஜெட்லி, இந்த ஆண்டு தனது பட்ஜெட் உரையில், ரூ.1 லட்சத்துக்கு மேல் எந்தப் பொருளை ரொக்கத்துக்கு வாங்கினாலும், விற்றாலும் ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்படும் என்று கூறி இருந்தார். அதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொழில் துறையினர் வர்த்தகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, பான் எண் குறிப்பிடுவதற்கான வரம்பை ரூ.2 லட்சமாக அருண் ஜெட்லி உயர்த்தி அறிவித்துள்ளார்.

இதற்கிடையே உணவக கட்டணம் செலுத்தவும், வெளிநாட்டு பயண டிக்கெட் வாங்கவும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலவழித்தால், பான் எண் குறிப்பிடுவது கட்டாயம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கும் அதிகமான மதிப்புள்ள வீடுகள் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கினாலும் பான் எண் கட்டாயம். ஜன் தன் யோஜனா திட்டம் தவிர அனைத்து வங்கிக்கணக்கு தொடங்குவதற்கும் பான் எண்ணை தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இத்தகவலை வருவாய்த்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages