மாநில அளவில் தொடர்ந்து 4ஆவது நாளாக கடலூர் நகரம் அதிக மழைப்பொழிவை பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக கனமழை பெய்தது.
எனினும் வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் ஒருசில பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில்
லேசான மழையே பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி
நேரத்தில் கடலூரில் அதிகபட்சமாக 86.90 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதன்படி
மாநில அளவில் கடலூர் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து 4 நாள்களாக, தமிழக
அளவில் அதிக மழைப்பொழிவு பெற்ற ஊர்களில் கடலூர் முதல் 2 இடங்களில் இடம்
பெற்றுள்ளது.
குறிப்பாக, கடந்த திங்கள்கிழமை இரவு முதல்
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கடலூரில் 97.40
மி.மீ. மழை பதிவானது. புதன்கிழமை 134.87 மி.மீ., வியாழக்கிழமை 132.80
மி.மீ., பதிவானது. வெள்ளிக்கிழமை மழையளவு குறைந்த போதிலும் மாநிலத்தில்
அதிகமான மழை கடலூரில் தான் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம்
(மில்லி மீட்டரில்): வானமாதேவி 62.20, பண்ருட்டி 50, கொத்தவாச்சேரி 59,
அண்ணாமலைநகர் 48.40, பரங்கிப்பேட்டை 48, சிதம்பரம் 38.80, சேத்தியோத்தோப்பு
54, விருத்தாசலம் 27, புவனகிரி 58, லால்பேட்டை 30, காட்டுமன்னார்கோயில்
29, குப்பநத்தம் 23, ஸ்ரீமுஷ்ணம் 34, லக்கூர் 26, பெலாந்துறை 13,
மேல்மாத்தூர் 10, காட்டுமயிலூர் 19, தொழுதூர் 3.
மலட்டாறில் நீர் வரத்து
நெய்வேலி: பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியப்
பகுதியில் மலட்டாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
திருக்கோவிலூர் தென்பெண்ணையாறு அணையில் இருந்து உபரி
நீர் மலட்டாற்றில் திருப்பி விடப்படும். இந்த ஆறு, விழுப்புரம், கடலூர்
மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம்
வரை பாய்கிறது.
தற்போது தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், மலட்டாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அவியனூர், பைத்தாம்பாடி, எனதிரிமங்கலம்,
கரும்பூர், ஒறையூர், ரெட்டிக்குப்பம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட
கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment